மாநில செய்திகள்

சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம் - கருணாநிதி மறைவுக்கு நடிகை நயன்தாரா இரங்கல் + "||" + We are losing the light of sunshine - actress Nayantara mourning the death of Karunanidhi

சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம் - கருணாநிதி மறைவுக்கு நடிகை நயன்தாரா இரங்கல்

சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம் - கருணாநிதி மறைவுக்கு நடிகை நயன்தாரா இரங்கல்
கருணாநிதி மறைவுக்கு நடிகை நயன்தாரா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து, நடிகை நயன்தாரா இரங்கல் செய்தி வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தங்களுடைய இனமான தலைவனை இழந்து வாடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்துக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் இரங்கல் செய்தி இது. நம் வாழ்வில் மிகுந்த இருண்ட 24 மணி நேர சோதனை இது என சொல்லலாம். சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம். நாம் காலத்தை வென்ற ஒரு எழுத்தாளரை, சிறந்த சொற்பொழிவாளரை, மிகச்சிறந்த அரசியல்வாதியை, நம் மாநிலத்தின் முகவரியான முகத்தை, இழந்து வாடுகிறோம்.


நம் மாநிலத்தின் குரலாக 75 ஆண்டுகளாக அவர் குரல் இருந்து வந்திருக்கிறது. அவர் ஆற்றி இருக்கும் சாதனைகள் எண்ணிலடங்காதவை. அவர் ஆட்சியில் இருக்கும் போது புரிந்த சாதனைகள் மறக்க முடியாதவை. அவர் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தி.மு.க.வினருக்கும், பொதுமக்களுக்கும் இந்த மீளாத்துயரில் இருந்து மீண்டு வர என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

வெளியூரில் நடந்து வரும் படப்பிடிப்பு காரணமாக அவருடைய இறுதி ஊர்வலத்தில் நான் கலந்துகொள்ளாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன். இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. வாஜ்பாய், அனந்தகுமாா், ஜாபர்ஷெரீப், அம்பரீஷ் மறைவுக்கு கர்நாடக சட்டசபையில் இரங்கல்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அனந்த குமார், ஜாபர்ஷெரீப், அம்பரீசுக்கு கர்நாடக சட்டசபையில் இரங்கல் தெரிவிக் கப்பட்டது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
2. பிரதமர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பு துறை அதிகாரி மறைவு; பிரதமர் மோடி இரங்கல்
பிரதமர் அலுவலக பி.ஆர்.ஓ. மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
3. ஜிம்பாப்வேயில் தனியார் விமானம் விபத்தில் சிக்கி 5 பேர் பலி
ஜிம்பாப்வேயில் தனியார் விமானம் விபத்தில் சிக்கியதில் 2 வர்த்தக உயர் அதிகாரிகள் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.
4. அரசியல் படத்தில், நயன்தாரா
அறம்–2 படத்தில், நயன்தாரா அரசியலில் ஈடுபடுவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
5. விளம்பர படங்களில் நடிக்க அதிக சம்பளம்
விளம்பர படங்களில் நடிப்பதற்கு அதிக சம்பளம் வாங்குபவர், நயன்தாராதான்.