சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை


சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை
x
தினத்தந்தி 9 Aug 2018 2:59 PM GMT (Updated: 2018-08-09T20:29:22+05:30)

சென்னையில் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்தது. சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

சென்னை,

சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை வேளைகளில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்வதை காண முடிகிறது. இந்த நிலையில், இன்று  சென்னையில் எழும்பூர், வேப்பேரி, செண்டரல், புரசைவாக்கம், ராயப்பேட்டை , திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கோபாலபுரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. மழை காரணமாக சில இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 


Next Story