மாநில செய்திகள்

தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு + "||" + Tamilnadu and puducherry heavy Rain Opportunity

தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக வால்பாறையில் 3 சென்டி மீட்டரும், சின்னக் கல்லார் மற்றும் ஏற்காட்டில் தலா 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.