மாநில செய்திகள்

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா? அதிகாரிகள் பதில் + "||" + in Chennai Will there be a water shortage? Officials answer

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா? அதிகாரிகள் பதில்

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா?
அதிகாரிகள் பதில்
சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டது. எனினும் இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை,

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் மாநிலம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் முழுமையாக தண்ணீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

தற்போது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு வருகிறது. ஆயிரத்து 81 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது வெறும் 1 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே சோழவரம் ஏரி வறண்டதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் கடந்த மாதங்களில் ஏரிகளில் போதிய தண்ணீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது சோழவரம் ஏரி முற்றிலுமாக வறண்டு விட்டதால், சோழவரத்தில் இருந்து ராட்சதக் குழாய்கள் மூலம் புழல் ஏரிக்கு குடிநீர் அனுப்பும் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. சோழவரம் ஏரியில் ஆங்காங்கே குட்டை போல் தேங்கிய தண்ணீரைக் கொண்டு சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

சோழவரம் ஏரியானது கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2005-ம் ஆண்டு முற்றிலுமாக வறண்டது. கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் திறக்கப்பட்டால் அல்லது ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்தால் மட்டுமே சோழவரம் ஏரியில் தண்ணீரை நிரப்ப முடியும்.

இருந்த போதிலும் பூண்டி ஏரியில் 13 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 673 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கத்தில் 423 மில்லியன் கன அடி என 1.1 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பில் உள்ளது.

இதுதவிர வீராணம் ஏரியில் இருந்து தினசரி 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில், தமிழர் தேசிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ராஜீவ்காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழர் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
2. குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என்று ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டது சென்னையில் மேலும் 300 சாதாரண கட்டண பஸ்கள்
சென்னையில் பயணிகளை கவருவதற்காக, மாநகர போக்குவரத்து கழகம் மேலும் சாதாரண கட்டண பஸ்களை இயக்குகிறது. அவற்றில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என்ற ஸ்டிக்கரையும் ஒட்டி உள்ளது.
3. சென்னையில் மின்சார பஸ்கள் இயக்க திட்டம்: லண்டனில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை
சென்னையில் மின்சார பஸ்கள் இயக்குவது குறித்து லண்டனுக்கு சென்று நிபுணர்களுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.
4. சென்னையில் பெரியார் சிலை மீது காலணி வீசிய பா.ஜ.க. தொண்டர் கைது
சென்னையில் பெரியார் பிறந்தநாள் விழாவின்போது, அவரது உருவ சிலையை நோக்கி காலணி வீசிய பா.ஜ.க. தொண்டர் கைது செய்யப்பட்டார்.
5. சென்னையில் காணாமல்போன ஏ.சி. பஸ்கள் ஆயுட்காலம் முடிந்துவிட்டதாக அதிகாரி தகவல்
சென்னையில் மாநகர ஏ.சி. பஸ்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் தற்போது 5 ஏ.சி. பஸ்களே இயக்கப்படுகின்றன.