திரையரங்குகளில் உணவுப்பொருள்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை


திரையரங்குகளில் உணவுப்பொருள்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை  தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 Sep 2018 12:20 PM GMT (Updated: 7 Sep 2018 12:31 PM GMT)

திரையரங்குகளில் உணவுப்பொருள்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

திரையரங்குகளில் உணவுப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். 335 திரையரங்குகளை ஆய்வு செய்ததில், கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்களை விற்றது தெரியவந்தது.

இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை விடுத்துள்ள அறிக்கையில்,

விதிமீறல் தொடர்பாக 114 தியேட்டர் கேண்டீன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் உணவுப்பொருள்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

335 திரையரங்குகளை ஆய்வு செய்ததில், கூடுதல் விலைக்கு பொருள்களை விற்றது தெரியவந்துள்ளது. 772 கேண்டீன் உரிமையாளர்கள், 38 தியேட்டர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் விலைக்கு பொருள்களை விற்றால் டிஎன். எல்.எம்.சி.டி.எஸ் என்ற ஆண்ட்ராய்டு செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம்.

பேருந்து. ரயில் நிலையங்களில், ஹோட்டல்கள், பல்பொருள் அக்காடிகளில்  கூடுதல் விலைக்கு பொருள்களை விற்றால் நடவடிக்கை. விதிமீறல் தொடர்பாக 114 தியேட்டர் கேண்டீன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொருள்களை தயாரிக்கும் 4 நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உணவுப்பொருட்களை எம்.ஆர்.பிக்கு அதிகமாக விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். பெட்ரோல்-டீசல் பங்க்குகளில் அளவு குறைவாக விற்பனை செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சாலையோர உணவகங்கள் போன்ற இடங்களில் கூடுதல் விலைக்கு உணவுபொருட்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story