மாநில செய்திகள்

மாணவி சோபியாவுக்கு எதிராக தமிழிசை தான் அளித்த புகாரை திரும்ப பெற வேண்டும் மு.க.ஸ்டாலின் + "||" + MK Stalin should get the complaint back

மாணவி சோபியாவுக்கு எதிராக தமிழிசை தான் அளித்த புகாரை திரும்ப பெற வேண்டும் மு.க.ஸ்டாலின்

மாணவி சோபியாவுக்கு எதிராக தமிழிசை தான் அளித்த புகாரை திரும்ப பெற வேண்டும் மு.க.ஸ்டாலின்
மாணவி சோபியாவுக்கு எதிராக தமிழிசை அளித்த புகாரை திரும்ப பெற வேண்டும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin
சென்னை,

தூத்துக்குடி கந்தன்காலனியை சேர்ந்தவர் சாமி. இவருடைய மகள் சோபியா (வயது 28). இவர் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். கடந்த 3-ந் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த போது பா.ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அதே விமானத்தில் பயணம் செய்த பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், சோபியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது, சோபியாவிடம் இருந்த பாஸ்போர்ட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பாஸ்போர்ட் பழைய பாஸ்போர்ட் என்பதால், சோபியாவின் புதிய பாஸ்போர்ட்டுடன், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அவருடைய தந்தை சாமிக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இந்த நிலையில் மாணவி சார்பில் வக்கீல் அதிசயகுமார் நேற்று காலை தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், புதுக்கோட்டை போலீசார் கடந்த 3-ந் தேதி விசாரணைக்காக எனது பழைய பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர். அதற்கான எந்த அத்தாட்சி சான்றும் தரவில்லை. எனது அமெரிக்க விசா, பழைய பாஸ்போர்ட்டில் உள்ளது. ஆகையால் எனது பழைய பாஸ்போர்ட்டை எனக்கு திரும்ப ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. கோர்ட்டில் ஏற்கப்பட்டு உள்ள இந்த மனு வருகிற 10-ந் தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு வர உள்ளதாக வக்கீல் தெரிவித்தார்.

இந்தநிலையில்,  மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய தமிழக அரசு முயற்சிப்பது கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

#பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய தமிழக அரசு முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. 

நீதிமன்றமே நிபந்தனை விதிக்காத நிலையில், காவல்துறை ஆய்வாளர் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யக்கோரி "சம்மன் அனுப்பி" மாணவியை பழிவாங்க துடிப்பது வேதனையளிக்கிறது!

மாணவி சோபியா கனடா சென்று மேற்படிப்பினை தொடர தமிழக அரசு அவர் மீது போடப்பட்ட வழக்கினை திரும்ப பெற வேண்டும். 

மேலும், “பொதுவாழ்வில் விமர்சனங்கள் ஆரோக்கியமானவை” என்பதை உணர்ந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்களும் தான் அளித்த புகாரை திரும்ப பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்!