அமைச்சர் கே.பாண்டியராஜனுடன் ஆஸ்திரேலிய துணைத்தூதர் சந்திப்பு


அமைச்சர் கே.பாண்டியராஜனுடன் ஆஸ்திரேலிய துணைத்தூதர் சந்திப்பு
x
தினத்தந்தி 11 Sep 2018 10:42 PM GMT (Updated: 11 Sep 2018 10:42 PM GMT)

அமைச்சர் கே.பாண்டியராஜனை ஆஸ்திரேலியாவின் தென்னிந்தியாவிற்கான துணைத்தூதர் மைக்கேல் கோஸ்டா நேற்று சந்தித்துப் பேசினார்.

சென்னை, 

தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் கே.பாண்டியராஜனை ஆஸ்திரேலியாவின் தென்னிந்தியாவிற்கான துணைத்தூதர் மைக்கேல் கோஸ்டா நேற்று சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, எழும்பூர் அருங்காட்சியகத்துடன் ஆஸ்திரேலியா தேசிய காட்சிக்கூடம் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், ஆஸ்திரேலிய பழங்குடியினர் குறித்த திரைப்பட விழாவை சென்னையில் நடத்துவது பற்றியும், 2035-ம் ஆண்டிற்குள் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் சார்ந்த ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அதோடு, தமிழகம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான கலாசார பரிவர்த்தனைகளை ஏற்படுத்துவது குறித்தும் கருத்து பரிமாறப்பட்டது.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story