மாநில செய்திகள்

மின்துறையில் ஊழல் என்றால் எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக உள்ளோம் -அமைச்சர் தங்கமணி + "||" + If corruption is corrupt We are ready to face any investigation Minister -Thangamani

மின்துறையில் ஊழல் என்றால் எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக உள்ளோம் -அமைச்சர் தங்கமணி

மின்துறையில் ஊழல் என்றால் எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக உள்ளோம் -அமைச்சர் தங்கமணி
மின்துறையில் ஊழல் என்றால் எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக உள்ளோம் என அமைச்சர் தங்கமணி கூறி உள்ளார்.
சென்னை

அமைச்சர் தங்கமணி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பராமரிப்பு பணி எனக் கூறி கடந்த 3 மாதங்களாக கூடங்குளத்தில் இருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் கூட வரவில்லை . மத்திய தொகுப்பில் இருந்து 3000 மெகாவாட் மின்சாரம் குறைந்துவிட்டது.  காற்றாலை மின்உற்பத்தியும் திடீரென குறைந்துவிட்டதால் சில பகுதிகளில் அரை மணி நேரம் மின்வெட்டு உள்ளது.

மின்வெட்டை கண்டுபிடித்ததே திமுக ஆட்சி தான்.நிலக்கரி ஊழல் என்ற குற்றச்சாட்டு பொய்யானது, திமுக ஆட்சியில் தான் நிலக்கரி அதிக விலையில் வாங்கப்பட்டது. ஸ்டாலினால் முதலமைச்சராக முடியவில்லை என்ற காரணத்தால் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறி வருகிறார். 

மின்துறையில் ஊழல் என்றால் எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக உள்ளோம். மின்சாரத்துறையில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் பணியிட மாறுதல் நடக்கிறது.  என கூறினார்