மாநில செய்திகள்

போதையில் சுற்றித்திரிந்த அமெரிக்க பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என போலீஸ் விசாரணை + "||" + Intoxicated Explorers American girl

போதையில் சுற்றித்திரிந்த அமெரிக்க பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என போலீஸ் விசாரணை

போதையில் சுற்றித்திரிந்த அமெரிக்க பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என போலீஸ் விசாரணை
தனது காதல் மனைவியான அமெரிக்க பெண்ணை, காஞ்சீபுரம் அருகே காரில் இருந்து கீழே தள்ளி விட்டு கணவர் தலைமறைவாகி விட்டார்.
ஆலந்தூர், 

தனது காதல் மனைவியான அமெரிக்க பெண்ணை, காஞ்சீபுரம் அருகே காரில் இருந்து கீழே தள்ளி விட்டு கணவர் தலைமறைவாகி விட்டார். அந்த பெண் அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் விமல். இவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது அந்த நாட்டைச்சேர்ந்த கெல்லாமேரி நெல்சன்(வயது 35) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு இருவரும் வேளச்சேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் காஞ்சீபுரத்தில் உள்ள வெள்ளகேட் என்ற இடத்தில் அமெரிக்க பெண் கெல்லாமேரி நெல்சன், நிர்வாண நிலையில் சுற்றித்திரிந்தார். போதையில் இருந்த அவர், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மீது கல்வீசி கலாட்டா செய்தபடி இருந்தார்.

இதுபற்றி பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் பெண் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று அமெரிக்க பெண்ணை மீட்டார். அவருக்கு பெண் போலீசார் சேலை கட்டிவிட்டு தண்ணீர் வழங்கினர். மேலும் அவர் சிகரெட் கேட்டதால் அதையும் வாங்கி கொடுத்தனர்.

பின்னர் அவரை காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர். அங்கு அவர், போதையில் போலீசாரிடம் கலாட்டாவில் ஈடுபட்டதுடன், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அதன்பிறகு மீண்டும் அமெரிக்க பெண்ணை போலீசார் மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். போதை தெளிந்த பிறகு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இவர், வீட்டிலேயே போதை பொருள் பயன்படுத்தியதாலும், தற்போது விமல் வேலை இல்லாமல் இருந்ததாலும் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று கணவன்- மனைவி இருவரும் போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த விமல், அமெரிக்க பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டு சென்றார். காஞ்சீபுரம் அருகே வெள்ளகேட் என்ற இடத்தில் வந்தபோது காரில் இருந்து தனது மனைவியான அமெரிக்க பெண்ணை கீழே தள்ளிவிட்டு சென்று விட்டார்.

அதன்பிறகு போதையில் அந்த பகுதியில் சென்ற வாகனங்கள் மீது கல்வீசி கலாட்டாவில் ஈடுபட்டபோது, பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அவர் மீட்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார், அவரை வேளச்சேரிக்கு அழைத்து வந்தனர். ஆனால் விமல் வீடு பூட்டிக்கிடந்தது. அவர் எங்கேயோ தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.

இதையடுத்து கானத்தூர் அருகே பனையூரில் உள்ள காப்பகத்தில் அமெரிக்க பெண் கெல்லாமேரி நெல்சனை போலீசார் ஒப்படைத்தனர். இதுபற்றி அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும் தகவல் தரப்பட்டது.

உடனடியாக அமெரிக்கா தூதரக அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அதில் அமெரிக்க பெண்ணின் பாஸ்போர்ட்டுகள் மற்றும் ஆவணங்கள் இல்லாததால் கானத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர்கள், அமெரிக்க பெண்ணின் பாஸ்போர்ட்டு மற்றும் ஆவணங்கள் தொலைந்துபோனதாக புகார் பதிவு செய்து, அதற்கான ரசீதை வழங்கினர்.

இதையடுத்து அமெரிக்க தூதரக அதிகாரிகள், காப்பகத்தில் இருந்த கெல்லாமேரி நெல்சனுக்கு தற்காலிக ஆவணங்களை வழங்கி, சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் வெள்ளகேட் பகுதியில் போதையில் சுற்றித்திரிந்த அமெரிக்க பெண் நிர்வாண நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் கற்பழிக்கப்பட்டிருக்கலாம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள், அவரை பாலியல் பலாத்காரம் செய்தனரா? என்ற கோணத்திலும் காஞ்சீபுரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.