மாநில செய்திகள்

கார் டிரைவர் ராஜாவை பேரவையில் இருந்து நீக்கி தீபா அதிரடி உத்தரவு + "||" + Car driver Raja Remove from the council! Deepa orders

கார் டிரைவர் ராஜாவை பேரவையில் இருந்து நீக்கி தீபா அதிரடி உத்தரவு

கார் டிரைவர் ராஜாவை பேரவையில் இருந்து நீக்கி தீபா அதிரடி உத்தரவு
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து கார் டிரைவர் ராஜா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் தீபா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: -

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (ஜெ.தீபா) அணி மற்றும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் கொள்கைக்கும், கோட்பாடுகளுக்கும், விதிமுறைகளுக்கும் மாறாக தொடர்ந்து கழகத்திற்கு களங்கத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் இன்று முதல் (17-09-2018) கழகத்தில் இருந்தும், பேரவையின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் A.V.ராஜா விடுவிக்கப்படுகிறார். எனவே அவருடன் கழக உறுப்பினர்கள் யாரும் கழக கட்டுப்பாட்டை மீறி எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜெ.தீபா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.