மாநில செய்திகள்

விழுப்புரம்: காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் தற்கொலை + "||" + cop should himself before he shoots his lover

விழுப்புரம்: காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் தற்கொலை

விழுப்புரம்: காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் 

தற்கொலை
விழுப்புரம் அருகே காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள அன்னியூரில், தனது காதலி சரஸ்வதி என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு கார்த்திவேல் என்ற காவலர் தானும் தற்கொலை செய்து கொண்டார். கார்த்திவேல் சென்னையில் காவலராக பணி புரிந்து வருகிறார். கார்த்திவேலால் சுட்டுக்கொல்லப்பட்ட சரஸ்வதி, எம்.பி.பி.எஸ் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

மருத்துவ மாணவியான சரஸ்வதிக்கு இன்று பிறந்த நாள்வாழ்த்துக்களை தெரிவிக்கச்சென்ற போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில், காவலர் அவரை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவத்தால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சத்திய மங்கலத்தைச்சேர்ந்த கார்த்திக்வேல் பேஸ்புக் மூலம் அன்னியூரைச்சேர்ந்த சரஸ்வதியை காதலித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. விழுப்புரத்தில் பரபரப்பு: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர்கள் மீது தாக்குதல்
விழுப்புரத்தில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, பணி பாதுகாப்பு வழங்கக்கோரி டாக்டர்கள், செவிலியர்கள் போராட்டம் நடத்தினர்.
2. விழுப்புரத்தில் சந்திரகாசி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது
விழுப்புரம் ரெயில் நிலைய யார்டில் சந்திரகாசி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது.
3. விழுப்புரம் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் பலி
விழுப்புரம் அருகே கிணற்றில் இறங்கி மின் மோட்டாரை சரி செய்தபோது விஷ வாயு தாக்கி 2 பேர் பலியானார்கள்.
4. மீனவர்களுக்கு நிவாரண தொகை கலெக்டர் சுப்பிரமணியன் அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி நிவாரண தொகை வழங்கப்பட இருப்பதாக கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
5. விழுப்புரம்: வீட்டில் தீப்பிடித்து 3 குழந்தைகளுடன் தாய் தீயில் கருகி உயிரிழப்பு
விழுப்புரம் அருகே உள்ள திருக்கோவிலூர் அருகே கீழகொண்டூரில் வீட்டில் தீப்பிடித்து 4 பேர் உயிரிழந்தனர்.