நெல்லை, கொல்லத்துக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு


நெல்லை, கொல்லத்துக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Oct 2018 7:47 PM GMT (Updated: 17 Oct 2018 7:47 PM GMT)

நெல்லை, கொல்லத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை, 

செங்கோட்டை-சென்னை சுவிதா சிறப்பு ரெயில்(வண்டி எண்:82610) நவம்பர் 6, டிசம்பர் 25 ஆகிய தேதிகளில் செங்கோட்டையில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

சென்னை-நெல்லை சுவிதா சிறப்பு ரெயில்(82601) டிசம்பர் 7, 21-ந்தேதிகளில் எழும்பூரில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கத்தில் (82602) டிசம்பர் 30-ந்தேதி நெல்லையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

தாம்பரம்-கொல்லம் சுவிதா சிறப்பு ரெயில்(82609) டிசம்பர் 7, 21-ந்தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கத்தில் (82618) டிசம்பர் 25, 29 மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி கொல்லத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

புதுச்சேரி-சந்திரகாச்சி சுவிதா சிறப்பு ரெயில் (82616) டிசம்பர் 29-ந்தேதி புதுச்சேரியில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு 31-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும்.

இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று(வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Next Story