2016-ல் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் விவரம்
2016-ல் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜனாதிபதிக்கு எழுதிய கடித நகல் வெளியாகியுள்ளது.
சென்னை,
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறந்தது வரையிலான காலகட்டத்தில் தமிழக பொறுப்பு கவர்னராக வித்யாசாகர்ராவ் இருந்தார். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது வித்யாசாகர்ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அவ்வப்போது ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல் கவர்னர் அலுவலகத்தின் மூலம் வெளியிடப்பட்டது.
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக 6.10.2016 அன்று ஜனாதிபதிக்கு அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் எழுதிய கடிதம் நகல் ஆறுமிகசாமி விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யபட்டு உள்ளது. அந்த கடித நகலில் 1.10.2016 அன்று அப்போலோவில் ஜெயலலிதாவை பார்த்தபோது அவர் உணர்வற்ற நிலையில் இருந்தார். ஜெயலலிதா உடல் நிலை குறித்து அவ்வப்போது அறிக்கை வெளியிட அப்பல்லோ நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளேன். என அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story