கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து


கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து
x
தினத்தந்தி 2 Nov 2018 7:40 AM GMT (Updated: 2 Nov 2018 7:40 AM GMT)

கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை

மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது அவரின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வாங்கியதாகவும் இதனை வருமானவரி கணக்கில் காட்டவில்லை என்றும் புகார் எழுந்தது. இதனையடுத்து 3 பேர் மீதும் கறுப்புப்பண தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி வருமான வரித்துறையினர் நீதிமன்றத்தில் புகார் பதிவு செய்தனர். வருமான வரித்துறையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு தடை கோரி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
 
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து என சென்னை ஐகோர்ட்  உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேர் மீதான வருமான வரித்துறையின் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Next Story