பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுல் சொன்ன கருத்து முக்கியமானது!-மு.க.ஸ்டாலின்


பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுல் சொன்ன கருத்து முக்கியமானது!-மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 2 Nov 2018 2:26 PM IST (Updated: 2 Nov 2018 2:26 PM IST)
t-max-icont-min-icon

‘தேசத்தைப் பாதுகாக்க இது ஜனநாயக நிர்பந்தம்’ என்று சந்திரபாபு நாயுடு சொன்னதை வழிமொழிகிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாரதீய ஜனதாவுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.

இந்தநிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.  பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுல் சொன்ன கருத்து முக்கியமானது! தேசத்தைப் பாதுகாக்க இது ஜனநாயக நிர்பந்தம்’ என்று சந்திரபாபு நாயுடு அவர்கள் சொன்னதை நான் வழிமொழிகிறேன்! மாநில சுயாட்சியைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story