மாநில செய்திகள்

செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய சென்னை என்ஜினீயர்போலீசில் சிக்கினார் + "||" + Cellphone pornography Threatened Chennai Engineer

செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய சென்னை என்ஜினீயர்போலீசில் சிக்கினார்

செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய சென்னை என்ஜினீயர்போலீசில் சிக்கினார்
பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை செல்போனில் படம் எடுத்து மிரட்டிய சென்னை என்ஜினீயர், அந்த படங்களை ‘வாட்ஸ்-அப்’பில் கணவருக்கு அனுப்பியதால் போலீசிடம் சிக்கினார்.
குளச்சல்,

குமரி மாவட்டம் மண்டைக்காடு புதூரை சேர்ந்தவர் சகாய பிரதிஷ்டன் (வயது 22). இவர் என்ஜினீயரிங் முடித்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே அவர் ஊருக்கு வரும் போது குளச்சல் பகுதிக்கு அடிக்கடி சென்று வந்தார்.

அப்போது திருமணமான 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்தார். அவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்தார். இந்தநிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சகாய பிரதிஷ்டன் வீடு புகுந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.

செல்போனில் படம் பிடித்தார்

மேலும் உல்லாசமாக இருந்ததை செல்போனில் படம் பிடித்தார். பலாத்காரம் செய்ததை வெளியே கூறினால், சமூக வலைத்தளங்களில் பரவ விடுவேன் என்று மிரட்டினார். இதனால் பயந்து போன அந்த பெண் வெளியே சொல்லவில்லை.

இதனை பயன்படுத்தி சகாய பிரதிஷ்டன் அவருடன் பல தடவை உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையே சகாய பிரதிஷ்டனிடம் உள்ள தொடர்பை கைவிட்ட அந்த பெண், மிரட்டலையும் பொருட்படுத்தாமல் இருந்தார்.

கணவருக்கு அனுப்பினார்

இதன்பிறகு சகாய பிரதிஷ்டனுக்கு, அந்த பெண்ணை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவானது. பெண்ணுடன் உல்லாசமாக இருந்த படங்களை ‘வாட்ஸ்-அப்’ மூலம் அவருடைய கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பினார். இதனை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து அந்த பெண் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சகாய பிரதிஷ்டனை கைது செய்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை