மாநில செய்திகள்

கடந்த 24 நாட்களில்பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் 20 காசு சரிவு + "||" + In the last 24 days 5 rupees and 20 paise per liter petrol price decline

கடந்த 24 நாட்களில்பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் 20 காசு சரிவு

கடந்த 24 நாட்களில்பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் 20 காசு சரிவு
‘கிடுகிடு’வென உயர்ந்து வாகன ஓட்டிகளை பீதியடைய செய்த பெட்ரோல்-டீசல் விலை, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கியது.
சென்னை, 

கடந்த மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.10-க்கும், டீசல் ரூ.80.04-க்கும் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.81.08-க்கும், டீசல் ரூ.76.89-க்கும் விற்பனை ஆனது.

இந்த நிலையில் முந்தைய நாள் விலையை காட்டிலும் நேற்று 18 காசு குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.9-க்கு நேற்று விற்பனை ஆனது. அதேபோல முந்தைய நாள் விலையை காட்டிலும் 17 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.76.72-க்கு நேற்று விற்பனை ஆனது. கடந்த 17-ந் தேதி முதல் நேற்று வரையிலான 24 நாட்களில் பெட்ரோல் 5 ரூபாய் 20 காசும், டீசல் 3 ரூபாய் 32 காசும் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.