நாகை மீனவ கிராமங்களில் ஒலிப்பெருக்கி மூலம் புயல் எச்சரிக்கை அறிவிப்பு


நாகை மீனவ கிராமங்களில் ஒலிப்பெருக்கி மூலம் புயல் எச்சரிக்கை அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Nov 2018 1:30 PM GMT (Updated: 13 Nov 2018 1:30 PM GMT)

நாகை மீனவ கிராமங்களில் ஒலிப்பெருக்கி மூலம் புயல் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

நாகை,

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் சென்னைக்கு கிழக்கே 600 கி.மீ. தூரத்திலும், நாகைக்கு வடகிழக்கே 760 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.  இந்த புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதனால் நாளை இரவு முதல் புயல் கரையை கடக்கும் வரையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும்.

புயல் கடக்கும் நேரத்தில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சில சமயம் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.  

இதனை தொடர்ந்து, நாகை மீனவ கிராமங்களில் ஒலிப்பெருக்கி மூலம் புயல் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.  கடற்கரையோரம் வசிக்கும் மீனவ மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.  இதேபோன்று ஆட்சியர் சுரேஷ் குமார், எஸ்.பி. விஜயகுமார் நேரில் சென்று மீனவ மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

Next Story