சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்புகள் : மக்கள் கருத்து என்ன? தந்தி டி.வி. கருத்து கணிப்பு முடிவுகள்


சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்புகள் : மக்கள்  கருத்து  என்ன? தந்தி டி.வி. கருத்து கணிப்பு  முடிவுகள்
x
தினத்தந்தி 15 Nov 2018 12:12 AM GMT (Updated: 15 Nov 2018 12:12 AM GMT)

திருமணமான ஒரு பெண் கணவருக்கு தெரிந்தே பிற ஆணுடன் உறவு வைத்துக் கொண்டால் அது குற்றம் ஆகாது என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. மற்றொரு வழக்கில், ஓரினச் சேர்க்கை குற்றம் அல்ல என்று தீர்ப்பு கூறியது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10  முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல ஆண்டாண்டு காலமாக தடை இருந்து வரும் நிலையில், அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறி யது.

சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இந்த அதிரடியான தீர்ப்புகள் விவாதத்துக்கு வழிவகுத்து உள்ளன.

இந்த மூன்று தீர்ப்புகள்    குறித்தும்  தந்தி டி.வி.யின் சார்பில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஒரு மாவட்டத்திலும் கடந்த  10 நாட்களாக கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

மாவட்டத்துக்கு 250 பேர் வீதம் ஆண், பெண் இரு தரப்பினரிடமும் மொத்தம் 8,250 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.

கருத்து கணிப்பின் முடிவுகள் வருமாறு:–




Next Story