புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 2 நாட்களில் மின் விநியோகம் சீராகும்


புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 2 நாட்களில் மின் விநியோகம் சீராகும்
x
தினத்தந்தி 16 Nov 2018 6:45 AM GMT (Updated: 16 Nov 2018 6:45 AM GMT)

புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 2 நாட்களில் மின் விநியோகம் சீராகும் என மின்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 2 நாட்களில் மின் விநியோகம் வழங்கப்படும் என மின்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கஜா புயலால்  தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கபட்டு உள்ளன.  நாகை மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 3 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளது.  திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளன.

புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 2 நாட்களில் மின் விநியோகம் வழங்கப்படும் என மின்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மின்துறைசார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கஜா புயலால் 12 ஆயிரம் மின்கம்பங்கள், 112 துணை மின் நிலையங்கள், 495 மின் கடத்திகள், 100 மின் மாற்றிகள் சேதம் அடைந்துள்ளது. கஜா புயலால்  பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 2 நாட்களில் மின் விநியோகம் வழங்கப்படும். பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு திருச்சி மற்றும் கோவையில் இருந்து கூடுதல் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மற்ற மாவட்டங்களில் இன்று மாலையே மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மின்துறை கூறி உள்ளது.

Next Story