வரும் 18-ந் தேதி மீண்டும் ஒரு புயல்? புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி -சென்னை வானிலை மையம்


வரும் 18-ந் தேதி மீண்டும் ஒரு புயல்? புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி -சென்னை வானிலை மையம்
x
தினத்தந்தி 16 Nov 2018 7:06 AM GMT (Updated: 16 Nov 2018 7:06 AM GMT)

நவ.18-ம் தேதி தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

சென்னை

சென்னை வானிலைமைய இயக்குனர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயல் காலை 11:30 மணியளவில் வலுகுறைந்து தாழ்வு மண்டலமாக மாறியது. வரும் 18-ம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்.

மீனவர்கள் இன்று மதியத்திற்கு மேல் கடலுக்கு செல்லலாம். நவ.18-ம் தேதி தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.

வரும் 18, 19-ம் தேதிகளில் தெற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, மதுரை, திருச்சி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என கூறி உள்ளார்.

Next Story