தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயல் பாதிப்பு குறைக்கப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி


தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயல் பாதிப்பு குறைக்கப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 16 Nov 2018 2:01 PM GMT (Updated: 16 Nov 2018 2:01 PM GMT)

தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயல் பாதிப்பு குறைக்கப்பட்டது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

முதலமைச்சர் பழனிசாமி - செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயல் பாதிப்பு குறைக்கப்பட்டது. கஜா புயலை எப்படி எதிர்கொள்வது என ஏற்கனவே அரசு திட்டமிட்டு பணியாற்றியது.  நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோர் நாளை செல்ல உள்ளனர்.

கஜா புயலால் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். மின் தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் விரைந்து பணியாற்றி மின்விநியோகம் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புயல் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அரசுக்கு தெரிவிப்பார்கள். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story