கஜா புயல் நிவாரணப்பணிகளில் அரசு முழுமையாக ஈடுபடவில்லை - ஸ்டாலின் குற்றச்சாட்டு
கஜா புயல் நிவாரணப்பணிகளில் அரசு முழுமையாக ஈடுபடவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. கஜா புயல் நிவாரணப்பணிகளில் அரசு முழுமையாக ஈடுபடவில்லை. பல்வேறு தரப்பில் நடைபெறும் போராட்டங்களை அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்க உள்ளனர். கருணாநிதியின் சிலையை திறந்துவைத்த பின் ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story