அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 5 Dec 2018 8:57 AM GMT (Updated: 5 Dec 2018 8:57 AM GMT)

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

சென்னை,

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

நேற்று குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திர கடற்கரை வரை நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கு திசையில் நகர்ந்து தற்போது குமரிக்கடல் முதல் வடக்கு கேரளா பகுதி வரை நிலவுகிறது.

இன்றிலிருந்து 3 நாட்களுக்கு தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் ஓரிருமுறை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சோழவரத்தில் 8 செ.மீ. தாமரைப்பாக்கத்தில் 5 செ.மீ, சென்னை விமான நிலையம், பொன்னேரி, கடலூர் பகுதிகளில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

Next Story