மாநில செய்திகள்

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்ட 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து + "||" + Ion sex maternal sex abuse: Accused On 16 people Thug act Cancel

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்ட 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்ட 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து
அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து
சென்னை

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குடியிருப்பில் வேலை செய்த லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காட்டியதையடுத்து, 16 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவர்கள் மீண்டும் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 16 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி 16 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து  செய்து  சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை