மாநில செய்திகள்

தமிழிசை சவுந்தரராஜனுக்கு, பிரதமர் மோடி பாராட்டு + "||" + tamilsai Soundararajan, Prime Modi Appreciation

தமிழிசை சவுந்தரராஜனுக்கு, பிரதமர் மோடி பாராட்டு

தமிழிசை சவுந்தரராஜனுக்கு, பிரதமர் மோடி பாராட்டு
டெல்லியில் நேற்று பா.ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடந்தது.
டெல்லியில் நேற்று  பா.ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். இந்த நிலையில் இன்று விருதுநகரில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.

அவரை காணொலி காட்சி மூலமாக பார்த்த பிரதமர் நரேந்திரமோடி, ‘‘டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்ட நீங்கள் உடனடியாக விருதுநகருக்கு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறீர்கள். இதில் இருந்து, நீங்கள் கடுமையான உழைப்பாளி என்பது தெரிகிறது’’ என தமிழிசை சவுந்தரராஜனை பாராட்டினார்.