பாகிஸ்தானின் பதன்கோட் மற்றும் உரி தாக்குதலுக்கு பாதுகாப்பு அமைச்சர் நற்சான்றிதழ் வழங்கி உள்ளார் -ப.சிதம்பரம்


பாகிஸ்தானின் பதன்கோட் மற்றும் உரி தாக்குதலுக்கு பாதுகாப்பு அமைச்சர் நற்சான்றிதழ் வழங்கி உள்ளார் -ப.சிதம்பரம்
x
தினத்தந்தி 14 Jan 2019 7:55 AM GMT (Updated: 14 Jan 2019 7:57 AM GMT)

பாகிஸ்தானின் பதன்கோட் மற்றும் உரி தாக்குதலுக்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நற்சான்றிதழ் வழங்கி உள்ளார் என ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

புதுடெல்லி

டெல்லியில் நடைபெற்ற பாரதீய ஜனதாவின் 2-வது நாள் மாநாட்டில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன்,

 2014-ஆம் ஆண்டு பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு எந்தவித பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவில்லை. நாட்டில் பேரழிவை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் எல்லைக்குள் அகற்றப்பட்டு விட்டன. அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் பயங்கரவாதிகளுடன் சமாதானத்திற்கு  வாய்ப்பு இல்லை என்று இந்த அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது என கூறினார்.

நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ள  முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்,

பாகிஸ்தானிலிருந்து 2014-க்குப் பிறகு பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் கூறி உள்ளார்.

2016-ஆம் ஆண்டு பதன்கோட் மற்றும் உரி ஆகிய இடங்களில்  பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. ஆனால் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மோசடி செய்து உள்ளார். பாதுகாப்பு மந்திரி இந்தியாவின் வரைபடத்தைத் தேர்ந்தெடுத்து, பதான்கோட் மற்றும் உரியை பார்ப்பாரா?

இந்த தாக்குதல்கள் பாகிஸ்தானிலிருந்து வந்தவையல்ல, என அவர் கூறுகிறாரா? பதான்கோட் மற்றும் உரி தாக்குதல்களுக்குப் பொறுப்பான பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு அமைச்சர் நற்சான்றிதழ் வழங்குகிறார் என கூறி உள்ளார்.


Next Story