ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு


ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 21 Jan 2019 9:57 AM GMT (Updated: 21 Jan 2019 10:17 AM GMT)

ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

சென்னை,

பழைய பென்‌ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக் கோரி பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஜாக்டோ ஜியோ இந்த போராட்டங்களில் பங்கேற்று வேலைநிறுத்த போராட்டமும் நடந்தது.

ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்றனர். தங்கள் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் வேலைநிறுத்தம் செய்வோம் என்று அறிவித்து இருந்தனர். வருகிற 22-ந் தேதி முதல் மீண்டும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. 

வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Next Story