தமிழக பட்ஜெட்டை படிக்காமலேயே ஸ்டாலின் கருத்து கூறியிருக்கிறார் -தமிழிசை சௌந்தரராஜன்


தமிழக பட்ஜெட்டை படிக்காமலேயே ஸ்டாலின் கருத்து கூறியிருக்கிறார் -தமிழிசை சௌந்தரராஜன்
x
தினத்தந்தி 8 Feb 2019 11:48 AM GMT (Updated: 8 Feb 2019 11:48 AM GMT)

தமிழக பட்ஜெட்டை முழுமையாக படிக்காமலேயே திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து கூறியிருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

2019-20-ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் 38 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருப்பதாவது:-

தமிழக பட்ஜெட் விவசாயத்தை கவனத்தில் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் படிப்பிற்கு உதவித்தொகை, அப்துல்கலாம் பெயரில் கல்லூரி, கஜா புயலால் பாதித்தவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் உள்ளிட்ட திட்டத்தை வரவேற்கிறோம். பெண் குழந்தைகளின் படிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்படுமென தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 

ஏழைகளுக்காகவும், விவசாயிகளுக்காகவும் நிறைய திட்டங்கள்  அறிவிக்கப்படுள்ளன. யார் யாரெல்லாம் பாஜக ஆட்சியில் பலன் பெற்றார்களோ, அவர்களது இல்லங்களில் 26-ம் தேதி தாமரை தீபம் ஏற்றப்படுகிறது. தமிழக பட்ஜெட்டை முழுமையாக படிக்காமலேயே திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து கூறியிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story