கமல் தேவையில்லாமல் திமுகவை விமர்சித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் - கே.எஸ்.அழகிரி


கமல் தேவையில்லாமல் திமுகவை விமர்சித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் - கே.எஸ்.அழகிரி
x
தினத்தந்தி 10 Feb 2019 8:02 AM GMT (Updated: 10 Feb 2019 8:02 AM GMT)

மக்கள் நீதி மய்யம்த்தலைவர் கமல்ஹாசனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத் தான் கூட்டணியில் சேர கமலுக்கு அழைப்பு விடுத்தேன். கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் போது, திமுகவை கமல் விமர்சனம் செய்தது என் கவனத்திற்கு வரவில்லை. கமல் தேவையில்லாமல் திமுகவை விமர்சித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

திமுகவை கமல் விமர்சித்தது கவனத்துக்கு வராததாலேயே அவரை கூட்டணிக்கு அழைத்தேன். திமுக மீதான கமலின் விமர்சனம் தேர்தல் நேரத்தில் பாஜகவிற்கு உதவும். எந்த ஒரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது பற்றி தலைமையிலான கூட்டணி தான் முடிவு செய்யும்.

திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி தான் முடிவு செய்யும். மக்கள் நீதி மய்யத்தை கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story