பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது


பெட்ரோல்  விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது
x
தினத்தந்தி 11 Feb 2019 1:06 AM GMT (Updated: 11 Feb 2019 1:06 AM GMT)

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்ந்துள்ளன. டீசல் விலையும் உயர்ந்துள்ளது.

சென்னை,

சர்வதேச கச்சா எண்ணைய்  விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் எண்ணைய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. 

அதன்படி, எண்ணைய் நிறுவனங்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி   சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து  லிட்டருக்கு ரூ.73 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.32 காசுகளாகவும் உள்ளது.

Next Story