சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வேலுமணி


சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வேலுமணி
x
தினத்தந்தி 13 Feb 2019 6:52 AM GMT (Updated: 13 Feb 2019 6:52 AM GMT)

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.158 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மு.க. ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் வேலுமணி பதில் அளித்தார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. ஏரிகளில் நீர் இருப்பு இல்லை. 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் என்ன நிலையில் உள்ளது. குடிநீர் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் வேலுமணி கூறும் போது,

"திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் குடிநீருக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.158 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் குடிநீர் பிரச்சினை வராது, மற்ற மாவட்டங்களிலும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க தயார்" என கூறினார்.

Next Story