நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி பெண்களுக்கு சரிபாதி தொகுதி ஒதுக்கீடு


நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி பெண்களுக்கு சரிபாதி தொகுதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 13 Feb 2019 8:10 PM GMT (Updated: 13 Feb 2019 8:10 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதில் பெண்களுக்கு சரிபாதியாக தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதில் பெண்களுக்கு சரிபாதியாக தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதில் ஆண்கள், பெண்கள் தலா 20 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட இருக்கிறது. இந்தநிலையில் ஆண்–பெண் வேட்பாளர்களுக்கான தொகுதி விவரங்களை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:–

ஆண்கள்–பெண்கள் தொகுதி

இதில் மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, திண்டுக்கல், தேனி, கரூர், பெரம்பலூர், சிதம்பரம் (தனி), தஞ்சை, தூத்துக்குடி, தென்காசி (தனி), கன்னியாகுமரி, புதுச்சேரி, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களாக ஆண்கள் நிறுத்தப்படுவார்கள்.

ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), தென் சென்னை, காஞ்சீபுரம் (தனி), வேலூர், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி (தனி), பொள்ளாச்சி, திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை (தனி), சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், நெல்லை ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களாக பெண்கள் நிறுத்தப்படுவார்கள்.

21 சட்டசபை தொகுதிகள்

அதேபோல, காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கு நடத்தப்படும் இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதில் பெரம்பூர், ஆம்பூர், அரவக்குறிச்சி, நிலக்கோட்டை, விளாத்திகுளம், சாத்தூர், பாப்பிரெட்டிபட்டி, சோளிங்கர், திருவாரூர், ஒட்டப்பிடாரம் (தனி), ஓசூர் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களாக ஆண்கள் நிறுத்தப்படுவார்கள்.

ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), தஞ்சாவூர், அரூர் (தனி), மானாமதுரை (தனி), குடியாத்தம் (தனி), திருப்போரூர், திருப்பரங்குன்றம், பரமக்குடி (தனி), பூந்தமல்லி தொகுதிகளில் வேட்பாளர்களாக பெண்களும் நிறுத்தப்படுவார்கள்.

மேற்கண்ட தகவல் நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


Next Story