மீண்டும் தொடர்ந்து ஏறும் பெட்ரோல், டீசல் விலை ! வாகன ஓட்டிகள் கவலை


மீண்டும் தொடர்ந்து ஏறும் பெட்ரோல், டீசல் விலை ! வாகன ஓட்டிகள் கவலை
x
தினத்தந்தி 18 Feb 2019 1:09 AM GMT (Updated: 18 Feb 2019 1:09 AM GMT)

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ரூ.73.61 ஆக விற்பனையாகிறது.

சென்னை, 

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. இதன்படி, இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். 

எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.61 ஆகவும், டீசல்,நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.84 காசுகளாகவும் உள்ளது.


Next Story