அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கன்னியாகுமரி தொகுதி ஒதுக்கினால் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன்


அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கன்னியாகுமரி தொகுதி ஒதுக்கினால் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 21 Feb 2019 5:51 PM GMT (Updated: 21 Feb 2019 5:51 PM GMT)

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கன்னியாகுமரி தொகுதி ஒதுக்கினால் நான் தான் போட்டியிடுவேன் என்று மத்திய இணை மந்திரி பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீடுகளை முடிப்பதிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. இந்த முறை மெகா கூட்டணியுடன், தேர்தலை சந்திக்க இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்னன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒரே மனநிலையில் இல்லை, அதனால் தான் கூட்டணியில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story