மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரிசென்னை ஐகோர்ட்டில் வேதாந்தா குழுமம் வழக்கு + "||" + Demand to reopen the Sterlite plant In the Chennai High Court Vedanta Group case

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரிசென்னை ஐகோர்ட்டில் வேதாந்தா குழுமம் வழக்கு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரிசென்னை ஐகோர்ட்டில் வேதாந்தா குழுமம்  வழக்கு
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா குழுமம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்ததா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஓய்வுபெற்ற ஐகோர்ட் தலைமை நீதிபதி தருண்அகர்வால் குழு அளித்த அறிக்கை அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிறுத்தி வைத்ததை தொடர்ந்து, வேதாந்தா குழுமம் சுப்ரீம் ம்கோர்ட்டில்  மேல்முறையீடு செய்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாலிநாரிமன், நவீன் சின்கா அடங்கிய அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்றும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டது. வழக்கை சென்னை ஐகோர்ட்டில்  மனு தாக்கல் செய்து சந்திக்க வேதாந்தா குழுமத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் வேதாந்தா குழுமம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும், எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுளள்து.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும், மின் இணைப்பு, நீர் இணைப்பு வழங்க தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின் வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு நாளை அல்லது நாளை மறு தினம் விசரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
2. 7 பேர் விடுதலை தீர்மானத்தில் கையெழுத்திட கவர்னர் முடிவு எடுக்க உத்தரவிடக்கோரி நளினி மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
7 பேர் விடுதலை தீர்மானத்தில் கையெழுத்திட கவர்னர் முடிவு எடுக்க உத்தரவிடக்கோரி நளினி மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
3. நீட் தேர்வு தமிழக அரசின் இரு சட்ட மசோதாக்கள் நிராகரிப்பு -மத்திய அரசு தகவல்
நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க கொண்டு வரப்பட்ட தமிழக அரசின் இரு சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. "ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளது" - வேதாந்தா நிறுவனம்
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
5. 2 அவதூறு வழக்குகளில் ஒரு வழக்கில் வைகோவை விடுவிக்க மறுப்பு
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 2 அவதூறு வழக்குகளில் ஒரு வழக்கில் அவரை விடுவித்த சென்னை ஐகோர்ட் மற்றொரு வழக்கில் விடுவிக்க மறுத்து விட்டது.