அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டும் என்று பா.ம.க. விரும்புகிறது - அன்புமணி ராமதாஸ்


அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டும் என்று பா.ம.க. விரும்புகிறது - அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 5 March 2019 1:22 PM IST (Updated: 5 March 2019 1:22 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டும் என்று பா.ம.க. விரும்புகிறது என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்  சந்தித்தார்.

பின்னர்  அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து முதலமைச்சரிடம் பேசினேன்.  காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என 10 லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுவையும் முதல்வரிடம் அளித்தேன்.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட மாவட்டமாக அறிவிப்பது தொடர்பாக குழு அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக பாஜகவிடம் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். 

அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டும் என்று பா.ம.க விரும்புகிறது. தங்கள் கூட்டணிக்கு தேமுதிக வருவதை வரவேற்கிறோம் என கூறினார்.

Next Story