நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? பிரேமலதா பதில்


நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? பிரேமலதா பதில்
x
தினத்தந்தி 13 March 2019 11:00 PM GMT (Updated: 2019-03-14T03:05:03+05:30)

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பிரேமலதா பதிலளித்துள்ளார்.

ஆலந்தூர், மார்ச்.14-

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:-

பொள்ளாச்சி சம்பவம் எல்லோரையும் மனதளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்த காலகட்டத்தில் இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வேதனையை தருகிறது. யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பின்புலம் கொண்டவராக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும். இவர்களுக்கு மிகப்பெரிய தண்டனையை தருவது மூலமாக வருங்காலத்தில் தவறு செய்ய முடியாத நிலை ஏற்படும்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் வேட்பாளர் நேர்காணல் நடக்கிறது. எந்தெந்த தொகுதிகள் என்று முடிவானதும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெறவுள்ள கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் தே.மு.தி.க. பங்கேற்கும். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேனா? என்பது தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story