மாநில செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு + "||" + Marxist Communist, Indian Union Muslim League candidates announcement

தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு

தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு
தி.மு.க. கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
சென்னை, 

கம்யூனிஸ்டு வேட்பாளர்கள்

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு கோவை, மதுரை ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்தார்.

கோவை தொகுதியில், கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மதுரை தொகுதியில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வெங்கடேசன், நடராஜன்

மதுரை தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் எழுத்தாளர். காவல் தோட்டம் என்ற நாவலுக்காக 2011-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவர். கீழடி அகழாய்வு, ஜல்லிக்கட்டு, செம்மொழி அந்தஸ்து உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து போராடியவர். திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு கமலா என்ற மனைவியும், யாழினி, தமிழினி என்ற 2 மகள்களும் உள்ளனர். 29 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பணியாற்றி வருகிறார்.

கோவை வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் 1968-ம் ஆண்டு முதல் கட்சி பணியில் ஈடுபட்டு வருகிறார். முன்னாள் எம்.பி.யான இவர் கோவை மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காக போராட்டங்களை முன்னெடுத்தவர். மாநகரத்தின் போக்குவரத்து நெரிசல் குறித்து நாடாளுமன்றத்தில் பேசி, 8 மேம்பாலங்களுக்கு ஒப்புதல் பெற்றார். இதில் 5 பாலப்பணிகள் முடிந்துள்ளது. இவருக்கு வனஜா என்ற மனைவியும், ஆர்த்தி, அருணா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

முஸ்லிம் லீக் வேட்பாளர்

தி.மு.க. கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவர் காதர்மொய்தீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் தொகுதியில் இ.யூ.மு.லீக் கவுரவ ஆலோசகர் கே.நவாஸ்கனி போட்டியிடுகிறார். இவர் ராமநாதபுரம் மாவட்டம், குருவாடியை சேர்ந்தவர். எஸ்.டி. கூரியர் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர். இவர் ஏணி சின்னத்தில் போட்டியிடுவார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1967-ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் எஸ்.எம்.ஷெரீப் சாகிப் வெற்றி பெற்று எம்.பி.யானார். அதன்பிறகு தற்போது மீண்டும் ராமநாதபுரத்தில் இந்த கட்சி களம் காண்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மார்க்சிஸ்ட் கட்சியுடன் இந்திய கம்யூனிஸ்டு ஒருங்கிணைந்து செயல்பட விருப்பம்
திரிபுரா, மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு காலத்தில் கோலாச்சிய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தற்போது தேர்தல்களில் தோல்வியே கிடைத்து வருகிறது.