தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு


தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு
x
தினத்தந்தி 16 March 2019 6:07 AM GMT (Updated: 2019-03-16T11:37:22+05:30)

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

சென்னை,

தே.மு.தி.க. பொதுச்செயலாளர்  விஜயகாந்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

விஜயகாந்த் இல்லம் வந்த முதல்-அமைச்சர் பழனிசாமியை, பிரேமலதா மற்றும் சுதிஷ் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிக்கப்படலாம் என தகவல்கள் பரவுகின்றன. இந்த சூழலில், விஜயகாந்தை முதல்-அமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார்.  இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

Next Story