தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படும் - சென்னை வானிலை மையம்
தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள தொலைத்தூர சலனங்களால், தென்தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை காலை 11 மணி முதல் நாளை மறுநாள் இரவு வரை வழக்கத்தை விட 2 மீட்டர் உயரம் வரை கடலில் அலைகள் எழும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தென் தமிழக கடலோர மீனவர்கள் பாதுகாப்பாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் தெளிவாக காணப்படும் என்றும், அதிகப்பட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story