அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தி.மு.க.வுக்கு ஆதரவு வழங்க முடிவு
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மக்களவை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 1991ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் முதல் அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றார். அவரது அமைச்சரவையில் ராஜகண்ணப்பன் 1996 வரை பொதுப்பணி துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். தொடர்ந்து நெடுஞ்சாலை துறை மற்றும் மின்துறை ஆகியவற்றின் பொறுப்புகளையும் அவர் வகித்து உள்ளார். அதன்பின் நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவியது. தி.மு.க. ஆட்சியை கைப்பற்றியது.
இதன்பின், மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியை 2000ம் ஆண்டில் தொடங்கினார். 2001ம் ஆண்டில் தி.மு.க.வுக்கு அவர் ஆதரவு வழங்கினார். தி.மு.க. கூட்டணியில் ராஜகண்ணப்பன் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவர் இளையான்குடி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த நிலையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டார். ஆனால் கட்சியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தி.மு.க.வுக்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக இன்று மாலை ஸ்டாலினை நேரில் சந்தித்து அக்கட்சிக்கு தனது ஆதரவை வழங்குகிறார்.
Related Tags :
Next Story