வறுமை ஒழிப்பு திட்டம் மூலம் நலிந்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 உதவித்தொகை -அ.தி.மு.க தேர்தல் அறிக்கை


வறுமை ஒழிப்பு திட்டம் மூலம் நலிந்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 உதவித்தொகை -அ.தி.மு.க தேர்தல் அறிக்கை
x
தினத்தந்தி 19 March 2019 11:47 AM IST (Updated: 19 March 2019 12:47 PM IST)
t-max-icont-min-icon

அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டம் மூலம் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் நலிந்தவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 வழங்கப்படும் என அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை,

மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  வாசித்தார்.

* அம்மா  தேசிய வறுமை ஒழிப்பு திட்டம் மூலம் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் நலிந்தவர்களுக்கு மாதாந்திர  உதவித்தொகை ரூ. 1500  வழங்கப்படும்.

* உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பை பெறும் வண்ணம் காலத்திற்கேற்ற பயிற்சி எம்.ஜி.ஆர் தேசிய வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு திட்டம்.

* காவிரி- கோதாவரி  இணைப்பு திட்டத்தை உடனடியாக  நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

* கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்படும்.

* நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்துவோம்.

Next Story