மாநில செய்திகள்

சென்னை அடையாறில் தற்கொலைக்கு முயன்ற காவலர் உயிரிழப்பு + "||" + Guard who attempted suicide in Adyar, Chennai died

சென்னை அடையாறில் தற்கொலைக்கு முயன்ற காவலர் உயிரிழப்பு

சென்னை அடையாறில் தற்கொலைக்கு முயன்ற காவலர் உயிரிழப்பு
சென்னையில் நீதிபதி வீட்டில் தற்கொலைக்கு முயன்ற காவலர் உயிரிழந்து உள்ளார்.
சென்னை,

சென்னை அடையாறில் நீதிபதி முரளிதரன் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த சரவணன் என்ற காவலர் கடந்த புதன்கிழமை திடீரென துப்பாக்கியால் சுட்டு கொண்டார். இதையடுத்து அங்கிருந்த காவலர்கள், சரவணனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் அவர் தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் தனது தற்கொலை முயற்சிக்கு யாரும் காரணம் அல்ல என எழுதி வைத்திருந்தார். சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஆயுதப்படை காவலராக சரவணன் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சரவணன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து விட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. செய்யாறு அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
செய்யாறு அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
2. வறுமை காரணமாக விபரீத முடிவு: கணவரை அடக்கம் செய்த இடத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை
சிறுகனூர் அருகே வறுமையின் காரணமாக கணவரை அடக்கம் செய்த இடத்தில் 3 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து வங்கி ஊழியர் திராவகம் குடித்து தற்கொலை
ஓட்டேரியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த வங்கி ஊழியர் திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் என்ஜினீயர் தற்கொலை தென்தாமரைகுளம் அருகே பரிதாபம்
தென்தாமரைகுளம் அருகே கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. ஆசிரியை தீக்குளித்து தற்கொலை திருமணம் செய்ய மறுத்த காதலன் கைது
மத்தூர் அருகே ஆசிரியை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை திருமணம் செய்ய மறுத்த காதலனை போலீசார் கைது செய்தனர்.