திமுக பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு


திமுக பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 March 2019 5:56 AM GMT (Updated: 28 March 2019 5:56 AM GMT)

தேர்தல் அறிக்கைகளில் அளித்த உறுதிமொழிகளை அதிமுக ஆட்சி தவறாது நிறைவேற்றி வந்துள்ளதாக பிரச்சாரம் செய்த முதலமைச்சர், திமுக பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

சென்னை

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு வளம்பெறவும், மேலும் செழிக்கவும் திறமை வாய்ந்த பிரதமரின் தலைமை தேவை என்றும், திறமையான, உறுதியான பிரதமராக திகழும் மோடி மீண்டும் அப்பதவிக்கு வரவேண்டும் .

தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டவாறு உறுதிமொழிகளை நிறைவேற்றிய ஆட்சி அதிமுக ஆட்சி. 

அதிமுக ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் தமிழகம் வளர்ச்சியை நோக்கி பீடுநடை போடுகிறது .

தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது என்று கூறினார்.

மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களையும் சுட்டிக்காட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

Next Story