பெட்ரோல் விலை குறைவு, டீசல் விலையில் மாற்றம் இல்லை


பெட்ரோல் விலை குறைவு, டீசல் விலையில் மாற்றம் இல்லை
x
தினத்தந்தி 9 April 2019 12:45 AM GMT (Updated: 9 April 2019 1:17 AM GMT)

பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.75.56 ஆக விற்பனையாகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. 

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.75.56 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.80 காசுகளாகவும் உள்ளது.


Next Story