பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. ரகசிய அறிக்கை தாக்கல்


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. ரகசிய அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 10 April 2019 9:12 AM GMT (Updated: 2019-04-10T16:33:32+05:30)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ரகசிய அறிக்கை தாக்கல் செய்தது சி.பி.சி.ஐ.டி.

சென்னை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை ஐகோர்ட்டில்  சி.பி.சி.ஐ.டி. ரகசிய அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சி.பி.ஐ. விசாரிப்பது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை நீக்கி பிறப்பிக்கப்பட்ட புதிய அரசாணை தங்களுக்கு வரவில்லை என சி.பி.ஐ. தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.புதிய அரசாணையை மனுதாரர் தரப்புக்கு வழங்க சென்னை ஐகோர்ட்  அறிவுறுத்தி உள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 5-வது நபராக மணிவண்ணன் சேர்க்கப்பட்டுள்ளார். புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கியதாக கைதான மணிவண்ணன் மீது பாலியல் புகாரும் சேர்க்கப்பட்டு உள்ளது. 

Next Story