ஒரு முதல்வர் ; இரு துணை முதல்வர் ; அதிமுகவுடன் தினகரனை இணைக்க முயற்சி -மத்திய அமைச்சர்


ஒரு முதல்வர் ; இரு துணை முதல்வர் ; அதிமுகவுடன் தினகரனை இணைக்க முயற்சி -மத்திய அமைச்சர்
x
தினத்தந்தி 11 April 2019 8:37 AM GMT (Updated: 11 April 2019 8:37 AM GMT)

அதிமுகவுடன் தினகரனை இணைக்க முயற்சி எடுத்ததாக பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

சென்னை

அதிமுகவுடன் தினகரனை இணைக்க முயற்சி எடுத்ததாக பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். சென்னையில், இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில்  பேசிய அவர், இணைப்பு குறித்து ஏற்கனவே தம்பிதுரையிடம் பேசியதாக தெரிவித்தார். தேர்தலுக்கு பிறகு அதிமுகவுடன், தினகரன் இணைந்தால், ஒருவர் முதல்வராகவும், இருவர் துணை முதல்வராகவும் இருக்கலாம் என்பது தமது தனிப்பட்ட கருத்து என்று ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

Next Story