பணமதிப்பிழப்பு மூலம் மக்களின் பணத்தை மோடி பறித்துக்கொண்டார் -ராகுல்காந்தி


பணமதிப்பிழப்பு மூலம் மக்களின் பணத்தை மோடி பறித்துக்கொண்டார் -ராகுல்காந்தி
x
தினத்தந்தி 12 April 2019 7:10 AM GMT (Updated: 2019-04-12T12:40:42+05:30)

பணமதிப்பிழப்பு மூலம் மக்களின் பணத்தை மோடி பறித்துக்கொண்டார் என்று ராகுல்காந்தி கிருஷ்ணகிரி பொதுக்கூட்டத்தில் பேசினார்.

கிருஷ்ணகிரி, 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 16-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

முதலில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:- 

*அம்பானி, நிரவ் மோடி உள்ளிட்ட 15 பேர்களுக்காகத்தான் மோடி ஆட்சி நடத்துகிறார்

*தனது குரல் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்று மோடி நினைக்கிறார். 

*தமிழர்களை தமிழர்கள் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். 

*வறுமைக்கு எதிராக சர்ஜிக்கல் நடத்த நான் விரும்பினேன். 

*ஆண்டுக்கு ரூ.72000 வழங்கினால், வறுமையிலிருந்து 20% ஏழைகளை மீட்கலாம் .
*பணமதிப்பிழப்பு மூலம் மக்களின் பணத்தை மோடி பறித்துக்கொண்டார்.

*தமிழக மக்களை அன்பால் தான் வெல்ல முடியும், வெறுப்பு அரசியலால் வெல்ல முடியாது.

*விவசாயிகள் போராட்டம் நடத்தும்போது பிரதமர் மோடி ஒருவார்த்தைக்கூட சொல்லவில்லை.

*இந்தியா பல்வேறு மாநிலங்கள், கலாச்சாரங்களால் உருவானது. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story