வறுமைக்கு எதிராக 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' நடத்த வேண்டும் என நான் விரும்புகிறேன் -ராகுல்காந்தி


வறுமைக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்த வேண்டும் என நான் விரும்புகிறேன் -ராகுல்காந்தி
x
தினத்தந்தி 12 April 2019 12:52 PM IST (Updated: 12 April 2019 12:52 PM IST)
t-max-icont-min-icon

வறுமைக்கு எதிராக 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' நடத்த வேண்டும் என நான் விரும்புகிறேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமாரை ஆதரித்து ராகுல் காந்தி கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது கூறியதாவது;-

* தமிழகத்தின் குரல் மத்தியில் கேட்கவில்லை, நாம் கேட்கச்செய்ய வேண்டும். 

* தமிழக மக்களை அன்பால் தான் வெல்ல முடியும், வெறுப்பு அரசியலால் வெல்ல முடியாது. வெறுப்பு அரசியலை திணிப்பதன் மூலம் தமிழகத்தில் பாஜக ஆட்சி செலுத்த முடியாது.

* விவசாயிகள் போராட்டம் நடத்தும்போது பிரதமர் மோடி ஒருவார்த்தைக்கூட சொல்லவில்லை.

* வறுமைக்கு எதிராக 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' நடத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்.

* அம்பானி, நீரவ் மோடி உள்ளிட்ட 15 நபர்களுக்காகவே பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார்.

* இந்தியா பல்வேறு மாநிலங்கள், கலாச்சாரங்களால் உருவானது. நாட்டில் ஏழ்மையை ஒழிக்க அதிரடி திட்டங்களை கொண்டுவர எண்ணி உள்ளேன், அதுதான் ஆண்டுக்கு ரூ.72,000 திட்டம்.

* தமிழர்களுக்கும் எனக்கும் இடையே உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது. தமிழகம் தமிழரால் ஆளப்படும், தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார்  என கூறினார்.

Next Story